கரோனா தடுப்பூசி விநியோகத்தின் இரண்டாம் கட்டப் பணி நேபாள நாட்டில் தொடங்கியுள்ளது. இதில் 65 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நேபாள பிரதமர்! - கரோனா தடுப்பூசி
காத்மாண்டு: கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை நேபாளத்தின் காபந்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று செலுத்திக் கொண்டார்.
இந்நிலையில், காத்மாண்டு மஹராஜ்கஞ்சில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில்அந்நாட்டு காபந்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருடன், அவரது மனைவி ராதிகா ஷாக்கியாவும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இதனையடுத்து, அனுமதி வழங்கப்பட்ட அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என ஒலி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உடல்நல குறைபாடால் பாதிக்கப்பட்ட ஒலி, கடந்த 2020ஆம் ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஒரு மில்லியன் கோவிஷில்ட் தடுப்பூசியை இந்தியா நேபாளத்திற்கு வழங்கியது.