இமயமலை நாடு என வர்ணிக்கப்படும் நேபாளத்தின் ஏழு மாகாணங்களில் காலியாகவுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
அதன் கூட்டணி கட்சியான நேபாள ராஷ்ட்ரிய ஜனதா (நேபாளம்) கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்தன. இவர்களை எதிர்த்து களம் கண்ட நேபாள காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இந்தத் தேர்தலில் ஆறு கட்சிகளைச் சேர்ந்த 45 வேட்பாளர்கள் களம் கண்டிருந்தனர். நேபாள தேசிய சட்டமன்றத்திற்கு மொத்தம் 59 இடங்கள் உள்ளன. இதிலுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.