நேபாளம் நாட்டு தலைநகர் காத்மாண்டுவில் உள்ள காட்டிகோலோ என்னும் குடியிருப்புப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் பலியாயினர். இது தொடர்பாக, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் ராணுவம், பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சுகேந்திரா என்னும் மற்றொரு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் படுகாயமடைந்த ஐந்து பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.