ஊழல் வழக்கில் கைதாகி சிறைத் தண்டணை அனுபவித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மருத்துவக் காரணங்களுக்காக ஆறுவார கால பிணை வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீப்புக்கு அறுவை சிகிச்சை?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நவாஸ் ஷெரீப்
இந்நிலையில், அவரை மருத்துவக் குழு முழுமையாக பரிசோதனை செய்தது. இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவரது தனிப்பட்ட மருத்துவர் அட்னன் கான், "இருதயம் சார்ந்த நோயின் மிக மோசமான நிலைக்கு நவாஸ் தள்ளப்பட்டுள்ளார். ஆன்ஜியோ சிகிச்சை ஒத்துழைக்கவில்லை என்றால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
Last Updated : Apr 16, 2019, 4:39 PM IST