ஆசிய - ஐரோப்பாவை இணைக்கும் பகுதிகளான அர்மேனியா - அசர்பைஜான் எல்லைகளில் இரு நாடுகளும் போரிட்டு வருகின்றன. குறிப்பாக, சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ - காராபக் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நகோர்னா - காராபாக் தன்னாட்சி பிராந்தியமாகத் திகழ்ந்து வரும் நிலையில், இந்தப் போருக்கு தீர்வாக தன்னாட்சி பிராந்தியம் சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டு நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிராந்திய அமைதியைக் கொண்டுவர அர்மேனியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து, கூட்டு பயங்கரவாத தடுப்பு மையத்தை ஏற்படுத்த வேண்டும்.