மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் நேப்பிடாவிலிருந்து 'பின் ஓ லிவின்' என்ற பகுதிக்கு 14 பேரை ஏற்றிச் சென்றது. இந்த விமானம் இன்று விபத்துக்குள்ளானது. அனிசகன் என்ற பகுதியில் விழுந்து இந்த விமானம் விபத்துக்குள்ளானதில், பயணித்த 12 பேர் உயிரிழந்தனர்.
மியான்மர் நாட்டில் விமான விபத்து; மூத்த புத்த துறவி உள்ளிட்ட 12 பேர் உயிரிழப்பு - மியான்மர் விமான விபத்து 12 பேர் பலி
மியான்மரில் ஏற்பட்ட விமான விபத்தில் மூத்த புத்த துறவி உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
myanmar-military-plane-crash-kills-12-including-senior-monk
ஒரு சிறுவன் உள்ளிட்ட இருவர் மட்டும் தப்பி பிழைத்துள்ளனர். இந்த விமானத்தில் ஆறு ராணுவ வீரர், இரு புத்த துறவிகள், ஆறு பக்தர்கள் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்திற்கு மோசமான வானிலையே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:ஜி7 மாநாடு: பிரிட்டன் பறந்த ஜோ பைடன்