தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மியான்மர் ராணுவத்திற்கு எதிரான பேச்சு; ஐநா தூதர் நீக்கம் - மியான்மரில் ராணுவ ஆட்சி

மியான்மர் ராணுவத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த ஐநா தூதர் கியோவ் மோ துன்-ஐ அந்நாட்டு ராணுவம் நீக்கியுள்ளது.

Myanmar
Myanmar

By

Published : Feb 28, 2021, 5:01 PM IST

மியான்மரில் ராணுவ ஆட்சி பிப்ரவரி ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாகக் கூறி அங்கிருந்த ஜனநாயக அரசை நீக்கிய ராணுவம், ஆட்சி அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

இதற்கு எதிராக அந்நாட்டில் பொது மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு வருத்தம் தெரிவித்து சர்வதேச சமூகம் குரலெழுப்பிவரும் நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் கியோவ் மோ துன் ராணுவத்திற்கு எதிரான கருத்தை பேசியுள்ளார்.

அப்பாவி பொதுமக்களை முடக்கி, ஜனநாயத்திற்கு விரோதமாகச் செயல்படும் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தூதரின் பேச்சுக்கு எதிர்வினையாக அந்நாட்டு ராணுவம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. மியான்மர் அரசுக்கு எதிராக துரோகம் செய்து, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் கூறி அவரை தூதர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவிடம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசி வாங்கும் பிரேசில்!

ABOUT THE AUTHOR

...view details