தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எவரெஸ்ட்டில் இருந்து 5 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம் - 5tone kg carbages

காத்மாண்டு: இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் தேங்கியிருந்த ஐந்தாயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் மூலம் குப்பை சேகரிப்பு

By

Published : May 9, 2019, 8:51 AM IST

இது குறித்து அந்நாட்டின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் மூன்றாயிரம் கிலோ குப்பைகள் உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்த முடிவு செய்து ஏப்ரல் 14ஆம் தேதி முதல் தூய்மைப்படுத்தும் பணிகளை, தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூன்றாயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.

எவரெஸ்ட் சிகரம்

இதையடுத்து, தொடர்ந்து நடைபெற்ற பணிகளில் இன்றுவரை இரண்டாயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன, ஆகமொத்தம் ஐந்தாயிரம் கிலோ குப்பைகள் தற்போது வரை அகற்றப்பட்டுள்ளன.

பெரும்பாலான குப்பைகள் மலையேறுவோர்கள் விட்டுச் சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள் போன்றவைகள்தான். மேலும், இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இறந்த கிடந்த சில உடல்களும் மீட்கப்பட்டதுதான்.

குப்பை சேகரிக்கும் வீரர்

முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர்கள்

1953ஆம் ஆண்டில் எட்மண்ட் ஹில்லாரி, டென்சிங் ஆகியோர் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details