நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மசூதியில் நடந்த இனவெறித் தாக்குதல் உலகத்தையே உலுக்கியது. இதில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
நியூசிலாந்து மசூதி தாக்குதல்: குற்றவாளிக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவு! - நீதிமன்றம் உத்தரவு
வெலிங்டன்: நியூசிலாந்து மசூதி தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி பிரெண்டன் டாரன்டை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த கிறிஸ்ட் சர்ச் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
New Zealand mosque attack-Mental health test
இந்தத் தாக்குதலின்முக்கியக் குற்றவாளியான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் என்ற 28 வயது இளைஞர், தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே கண்காணிப்பு கேமரா மூலம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று இரண்டாவது நாள் விசாரணைக்காக காணொளி காட்சி மூலம் ஆஜரான இவரை, மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கிறிஸ்ட் சர்ச் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.