தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஸ்டாலின் குறித்து கட்டுரை எழுத மறுப்பு: 4 பத்தியாளர்களுக்கு கத்திக் குத்து - moscow

மாஸ்கோ: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து கட்டுரை எழுத மறுத்த நான்கு ரஷ்ய பத்திரிகையாளர்களை முதியவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

stalin

By

Published : May 28, 2019, 9:17 PM IST

ரஷ்யா நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனமான ரதினா, நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்டாரொபோல் நகரில் அமைந்துள்ளது.

இந்நிலையில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து தான் எழுதிய கட்டுரையை அப்பத்திரிகையில் வெளியிடுவது குறித்து 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரதினா பத்திரிகை அலுவலகத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

அங்கு, அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியர் நிக்கோலெய் பொன்டாரென்கோவை (Nikolai Bondarenko) சந்தித்து, தன் கட்டுரையை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார். அதற்கு நிக்கோலெய் மறுப்பு தெரிவிக்க, அந்த முதியவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தியுள்ளார்.

இதைக் கண்டு அலுவலகத்திலிருந்து மூன்று பத்திரிகையாளர்கள் அந்த முதியவரைத் தடுக்க சென்றுள்ளனர். அப்போது, அவர்களையும் அந்த முதியவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த தலைமை ஆசிரியர் நிக்கோலெய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திகுத்து வாங்கிய மூன்று பத்திரிகை ஊழியர்கள் சிறு சிறு காயங்களுடன் உயர் தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த ரஷ்ய காவல் துறையினர் அந்த முதியவரை கைது செய்துள்ளனர். பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், ஸ்டாலினுக்காக அந்த தலைமை ஆசிரியரைக் கொன்று, மக்களின் கண்டனத்தை பெறவே தான் முயன்றாக அந்த முதியவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details