கோலாலம்பூர்:ரோனா வைரஸ் தொற்று நோயை சரியாகக் கையாளாதது, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சரியான நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மலேசிய அரசு மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
மேலும், பிரதமர் முகைதின் யாசின் தனது பெரும்பான்மையை மக்களவையில் நிரூபிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன. தொடர்ந்து முகைதின் யாசினுக்கு ஆதரவளித்து வந்த கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்பிக்கள் தங்களது ஆதரவை திரும்பப்பெற்றதன் மூலம், அவருக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனது.
பிரதமர் ராஜினாமா
எதிர்க்கட்சிகள், ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், அதனை ஏற்காத பிரதமர் முகைதின் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவே கூறிவந்தார். மேலும், அடுத்த மாதம் மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகவும் தெரிவித்து வந்தார்.
இதற்கிடையில், அவருக்கு ஆதரவளித்து வந்த 15 எம்பிக்கள் தங்களது ஆதரவை திரும்பப் பெறுவதாக மன்னருக்கு கடிதம் அனுப்பினர். இந்தக் கடிதத்தை மன்னரும் ஏற்றுக் கொண்டதாக எம்பிக்கள் தெரிவித்த நிலையில், வேறு வழியில்லாமல் நேற்று (ஆக.16) தனது பதவியை முகைதின் ராஜினாமா செய்தார்.
அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட மலேசியா மன்னர், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரையில், முகைதின் இடைக்காலப் பிரதமராக இருப்பார் எனத் தெரிவித்தார்.
கரோனாவை சரியாக கையாளாது, நிதி நிலையை சரியா நிர்வாகிக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரதமர் முகைதின் யாசின் மீது வைக்கப்பட்டது.