மலேசியா பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாத யாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் தொற்றும் புதிய வைரஸைப் பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், பத்து மலையில் கூவிந்த பக்தர்கள் கூட்டம் முந்தைய ஆண்டுகளைப் போலவே பெரும் எண்ணிக்கையில் இருந்தது. ஒரு சிலரே பாதுகாப்பு முகமூடிகளை அணிந்திருந்தனர்.
சீனாவில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றுள்ள கொரோனா வைரஸால், இதுவரை மலேசியாவில் 16 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நோய்க்கிருமி பரவிவரும் சூழலிலும், தமிழ்க்கடவுள் முருகன் மீதுள்ள பக்தியை தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.