தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2019, 10:00 PM IST

ETV Bharat / international

மாற்றான் பூனைக்குட்டி - இரண்டு வாய்களில் சாப்பாடு கேட்பதால் உரிமையாளர் குழப்பம்!

சேக்ரமெண்டோ: பிறந்த பூனைக்குட்டி diprosopus என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு, ஒரே தலையில் இரண்டு முகங்களுடன் பிறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Duo

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்த பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் இருப்பதைக் கண்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக, கால்நடை மருத்துவராகப் பணிபுரியும், தனது தோழியை அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, வீட்டிற்கு விரைந்த மருத்துவர் ரால்ப் டிரான், இந்த பூனைக்குட்டியை நான் வளர்த்துக் கொள்வதாக தத்தெடுத்துள்ளார். இந்த பூனைக்குட்டிக்கு டியோ என பெயரிடப்பட்டுள்ளது. மருத்துவர் ரால்ப் டிரான், வீட்டில் மற்ற பூனைக்குட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ரால்ப் டிரான் கூறுகையில்," Diprosopus என்னும் நோயின் காரணமாகப் பூனைக்குட்டி ஒரு தலை மற்றும் இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது. முதலில் டியோ சாப்பிடுவதற்கு விருப்பம் காட்டாத காரணத்தினால், குழாய் மூலம் உணவளிக்க நேரிட்டது. முதலில் மயக்க மருந்துக்குப் போதுமான எடை அதிகரித்ததுடன், பூனைக்குட்டியின் மையக் கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும். மேலும், இரண்டு கண்களின் இமைகள் உள்நோக்கி வளருவதால், கண் இமைகளில் எரிச்சலடைய வாய்ப்பு இருப்பதால், அதையும் சரி செய்ய வேண்டும். டியோக்கு இருக்கும் ஒரே பிரச்னை உணவு அளிக்கும் போது, இரண்டு வாய்களும் ஒரே நேரத்தில் உணவு கேட்பது தான். தற்போது, சாதாரண பூனை போல், நடக்கப் பழகியது மட்டுமல்லாமல் மரத்திலும் ஏறக் கற்றுக்கொண்டது. இன்னும் 300 கிராம் எடை அதிகரித்து விட்டால், அறுவை சிகிச்சை செய்வதற்கு போதுமானதாக இருக்கும்' எனத் தெரிவித்தார்.

டியோ பூனைக்குட்டி

தற்போது, டியோ பிறந்து நான்கு மாதங்கள் முடிந்துள்ளன. இதற்கு முன்பு, ஃபிராங்கண்லூய்( Frankenlouie) ஜானஸ் பூனை தான் diprosopus நோயினுடன் நீண்ட காலங்கள் வாழ்ந்த பூனை என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி: புகைப்படங்கள் வைரல்

ABOUT THE AUTHOR

...view details