ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை, வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இம்மாத இறுதியில் சந்தித்துப் பேசவார் என ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகை அறிவித்திருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் இடம், தேதி ஆகியவை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கிடையே, ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டோக் நகரில் இந்த சந்திப்பு 25 ஆம் தேதி (நாளை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க மற்றொரு சந்திப்பு - ரஷ்யாவுக்கு புறப்பட்ட கிம்!
பியோங்யாங்: ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பிற்காக தனி ரயில் மூலம் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த சந்திப்பிற்காக தனி ரயில் மூலம் தலைநகர் பியோங்யாங்விலிருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணம் 20 மணி நேரத்திற்கும் மேலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு உறவுகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் இருவரும் விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடனான ஹனோயில் உச்சி மாநாடு தோல்வியை தழுவியதையடுத்து, வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் மேற்கொள்ளும் முதல் அரசு முறை பயணம் இதுவாகும். கடந்த பிப்ரவரி மாதம், வியட்நாம் தலைநகர் ஹனோயிலுக்கு 60 மணி நேர ரயில் பயணத்தை கிம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.