தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கேரள செவிலிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு! - Kerala nurse affected by coronavirus

சவூதியில் செவிலியாகப் பணிபுரியும் பெண்ணுக்கு கரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kerala nurse tests positive for coronavirus
Kerala nurse tests positive for coronavirus

By

Published : Jan 24, 2020, 10:06 AM IST

Updated : Mar 17, 2020, 4:53 PM IST

சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலி ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு அவருடன் சென்ற 100 செவிலியர்களில் இவருக்கு மட்டும் வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைரஸ் கண்டறியப்பட்ட செவிலிக்கு சவூதி நாட்டிலுள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உடல் நிலை தேறி வருவதாக கேரள மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கும்படி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து சீனாவிலிருந்து திரும்பி வருபவர்கள் தங்களது மாவட்ட மருத்துவ அலுவலர்ளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் கண்காணிப்பை விரைவுபடுத்துமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் : இந்திய மாணவர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு

Last Updated : Mar 17, 2020, 4:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details