பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ், பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்துள்ளார். அவரது பிறந்தநாளன்று ஆண்டுதோறும் சீக்கியர்கள் அவரை வழிபட பாகிஸ்தானிற்கு செல்கின்றனர். சீக்கியர்கள் சிரமமின்றி அந்த யாத்திரைக்கு செல்வதற்காக, பஞ்சாப்பில் உள்ள தேரா பாபா நானக் குருந்தவாராவில் இருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை வழித்தடம் அமைப்பதாகக் கூறி அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன.
சீக்கியர்களின் புனித பயணம்: கர்தார்பூர் வழித்தடம் விரைவில் திறப்பு! - குருநாநக் தேவ் பிறந்தநாள்
சீக்கியர்களின் புனித பயணத்திற்காக மேற்கொள்ளப்படும் கர்தார்பூர் வழித்தடம் நவம்பர் 9ஆம் தேதி குருநானக் தேவ் பிறந்தநாளன்று திறக்கப்படவுள்ளது.
kartarpur corridor
இந்நிலையில், சீக்கியர்கள் குருநானக் தேவ்யை தரிசிக்க செல்லும் யாத்திரைக்காக கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படவுள்ளது. இந்த வழித்தடம் குருநானக் தேவ் பிறந்தநாளன்று திறக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மேலும் இம்முறை இந்த புனித பயணத்தின் மூலம் ஐந்தாயிரம் பயணிகளை அனுமதிக்கவுள்ளதாக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.