தெற்கு ஹெல்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஒமர் வாக் இது குறித்து, எல்யாஸ் டாயீ எனும் ஊடகவியலாளர் வண்டியில் வைத்த குண்டு வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் எல்யாஸின் சகோதரர், ஒரு குழந்தை மற்றும் வேறொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் குண்டுவெடிப்பில் ஊடகவியலாளர் பலி - வன்முறை சம்பவங்கள்
காபூல்: தெற்கு ஆப்கானில் ஊடகவியலாளர் ஒருவர் வண்டியில் குண்டு வைத்து கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
எல்யாஸ் டாயீ, ரேடியோ ஆசாதியில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்தவர். அவர் மரணம் தொடர்பாக ரேடியோ ஆசாதியின் தலைமை அலுவலர் சமி மஹ்தி, என் உடன் பணிபுரிந்தவரும், நெருங்கிய நண்பருமான எல்யாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நம் மாகாண தலைநகர் லக்ஷர் ஹாவில் நடைபெற்றுள்ளது. அவர் ஒரு சிறந்த மனிதர், கள்ளங்கபடமற்ற சிரிப்புக்கு சொந்தக்காரர். எல்யாஸ் உன் நினைவுகள் எப்போதும் எங்களோடு இருக்கும் என ட்வீட் செய்துள்ளார்.
காபூலில் டோலோ தொலைக்காட்சி தொகுப்பாளர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மறுநாள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பங்கள் அதிகரித்து வருகின்றன.