தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நியூசிலாந்தில் தானியங்கி ராணுவ ரக துப்பாக்கிகளுக்கு தடை!

வெலிங்டன்: நியூசிலாந்தில் பயன்பாட்டில் உள்ள தானியங்கி ராணுவ ரக துப்பாக்கிகளுக்கு அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் தானியங்கி ராணுவ ரக துப்பாக்கிகளுக்கு தடை

By

Published : Mar 21, 2019, 11:30 AM IST

கடந்த 15ஆம் தேதி, நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரண்டுமசூதிகளில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து, நியூசிலாந்தின் துப்பாக்கி சட்டத்தில்திருத்தம் மேற்கொள்ளபடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள ஜெசிந்தா, "தாக்குதல் நடைபெற்று ஆறு நாட்கள்கடந்த நிலையில், தானியங்கி ராணுவ ரக துப்பாக்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வர உள்ளது" என்றார்.

மேலும், இத்தகைய துப்பாக்கிகளுக்கு தேவைப்படும் உபகரணங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு காவல்துறை அமைச்சர் ஸ்டுவர்ட் நாஷ், "ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். நியூசிலாந்தில் துப்பாக்கியை வைத்துக்கொள்வது சிறப்புரிமையே தவிரஉரிமை இல்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details