உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு தடுப்பூசிகள் ஏதும் கண்டுபிடிக்காமல் இருக்கும் காரணத்தால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிலுள்ள பார் இலன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசியை உருவாக்க தேவையான கரோனா வைரஸின் மூலக்கூறுகளை கண்டறிந்துள்ளதாக பார் இலன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஐயூ கூறுகையில், "வைரஸின் புரதத் தொகுப்பிலுள்ள ஆன்டிஜென் மூலக்கூறுகளின் புரத பாகங்கள் மற்றும் எபிடோப்களின் தொகுப்பை எங்களது ஆராய்ச்சி குழு அடையாளம் கண்டுள்ளது. இந்த எபிடோப்கள் மூலம், ஆன்டிபாடி மற்றும் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை நம்மால் உருவாக்க முடியும். மேலும் வைரஸின் புரத உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த ஒரு பயோ-இன்ஃபர்மேடிக்ஸ் அடிப்படையிலான கணக்கீட்டு அணுகுமுறையையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துள்ளனர்.
மேலும், குழுவின் அறிக்கைப்படி, உலகளவில் வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்களில், 87 விழுக்காட்டிற்கும் அதிகமானோருக்கு ஏழு எபிடோப்கள் இருப்பதாக கருதப்படுகிறது. அதேசமயம் ஏழு எபிடோப்கலும் அவற்றின் ஒவ்வாமை மற்றும் நச்சுத்தன்மையற்ற தன்மைகளை கொண்டுள்ளதாகவும், அத்துடன் அவை குறைந்த ஆபத்தைக் கொண்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.