இலங்கையில் கடந்த ஞாயிறன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 253 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பொது இடங்களில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் ஐஎஸ் அமைப்பு எப்போதும் ஒரு தாக்குதலுக்கு தாமதமாக பொறுப்பேற்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி ஆகிய அமைப்புகள் மீது அந்நாட்டு அரசாங்கம் குற்றம்சாட்டி தடை விதித்துள்ளது.