கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில், அந்நோய் மத்திய கிழக்கு நாடான ஈரானை வெகுவாகப் பாதித்துள்ளது. இதுவரை அந்நோய் பாதிப்பால் 77 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இரண்டாயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் உயிரிழப்பு விகிதம் 3.3 விழுக்காடு அதிகமாக உள்ளதாகவும், அத்துடன் அந்நாட்டின் தலைவர்கள் சுமார் 23 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு உயர்மட்ட அலுவலர்கள் அவசர நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு (Ayatollah Ali Khamenei) நெருக்கமான தலைவரான முகமது மிர்மொகமதி கொரோனா பாதிப்பால் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார்.