தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அணு விஞ்ஞானியைக் கொன்ற ஆயுதம் இஸ்ரேலைச் சேர்ந்தது: ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு - இஸ்ரேலின் உளவுத் துறையான மோசத்

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோஹ்சென் ஃபக்ரிசாத்தை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என ஈரான் அரசு ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மோஹ்சென் ஃபக்ரிசாத்
மோஹ்சென் ஃபக்ரிசாத்

By

Published : Nov 30, 2020, 10:22 PM IST

ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானியான மோஹ்சென் ஃபக்ரிசாத் நவம்பர் 27ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்கே உள்ள அப்சர்த் என்னும் கிராமத்தின் வழியாக, அவர் காரில் பயணம் செய்யும்போது அவரை ஒரு கும்பல் சுட்டுக்கொன்றது.

இந்தக் கொலைக்குப் பின்னணியில் இஸ்ரேல் அரசு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. குறிப்பாக, இஸ்ரேலின் உளவுத் துறையான மோசத் அமைப்புதான், இந்தச் செயலை அரங்கேற்றியுள்ளதாகப் பரவலாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து ஈரான் அரசின் செய்தி நிறுவனம், தற்போது முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது. அதில், 'சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம், இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தப்படும் வகையைச் சேர்ந்தது' எனப் பகிரங்க குற்றச்சாட்டை தற்போது முன்வைத்துள்ளது.

ஈரான் நாட்டின் அணு ஆயுத முன்னெடுப்புகளைத் தீவிரமாக இஸ்ரேல், அமெரிக்கா எதிர்த்து வருகிறது.

இந்தச் சூழலில், ஈரானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:அவரச அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள மாடர்னா

ABOUT THE AUTHOR

...view details