தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் முதல் முறையாக அதிபர் பதவிக்கான தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என மூன்றும் ஒரே நாளில் நடைபெற உள்ளன. இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தோனேஷியாவில் 17 ஆம் தேதி பொதுத் தேர்தல்! - 17 th april
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஏப்ரல் 17 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் வாக்களிக்க 192 மில்லியன் மக்கள் தகுதிபெற்றுள்ளனர். நாடு முழுவதும் எட்டு லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 575 நாடாளுமன்ற இடங்களுக்கு 16 கட்சிகள் போட்டியிடுகின்றன. மேலும், மாகாணம் மற்றும் மாவட்ட அளவிலான உள்ளாட்சி தேர்தலில் இரண்டு லட்சத்து 45 ஆயிரம் பேர் களம் காண்கின்றனர். தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் நான்கு லட்சத்து 53 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.