தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2020, 3:50 PM IST

ETV Bharat / international

சீனா, பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டம் நவ.18இல் தொடக்கம்!

சீனா, பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டம் நவ.18இல் தொடங்குகிறது.

mega CPEC City  CPEC City project  Xi Jinping  Belt and Road Initiative  China-Pakistan Economic Corridor  China- Pakistan ties  சீனா, பாகிஸ்தான் பொருளாதார தளவாட திட்டம்  சீனா, பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டம்
mega CPEC City CPEC City project Xi Jinping Belt and Road Initiative China-Pakistan Economic Corridor China- Pakistan ties சீனா, பாகிஸ்தான் பொருளாதார தளவாட திட்டம் சீனா, பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டம்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 18 ஆம் தேதி கைபர் பக்துன்க்வாவில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டத்தின் (சிபிஇசி) கீழ் மேம்பாட்டு பணிகளை தொடங்கவுள்ளார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (நவ.1) பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக், ரஷாகாய் பகுதியில் சீனா பாகிஸ்தான் பொருளாதார திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேலும், “இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நகர், கல்வி நிலையங்கள், வணிக மண்டலங்கள், பொது கட்டடங்கள், குடியிருப்புகள், கோல்ஃப் மைதானம், தீம் பார்க் மற்றும் விளையாட்டு வசதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்" என்றும் அவர் கூறினார்.

இது நவ்ஷெரா மற்றும் அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறிய கட்டாக் ஏராளமான தொழில் பிரிவுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சீனா, பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டத்தின் மதிப்பு 62 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை ஒரு பெரிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் கடல் பாதைகள் மூலம் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே குவாடர் துறைமுகத்துக்கு சரக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இருப்பினும் 2017ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, பெரிய பெரிய மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் சீனா, பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டம் நவ.18இல் தொடங்குகிறது.

இதையும் படிங்க: புல்வாமா தாக்குதலை மேற்கொண்டது நாங்கள் தான் - ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details