தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்லாமிய வெறுப்புவாத கருத்துகளை பேஸ்புக் தடை செய்ய வேண்டும் - இம்ரான் கான் கோரிக்கை - மார்க் ஜூக்கர்பெர்க்

இஸ்லாமாபாத்: இஸ்லாமிய வெறுப்புவாத கருத்துகள் இணையத்தில் பரப்பப்படுவதை பேஸ்புக் நிறுவனம் தடை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

Imran Khan
Imran Khan

By

Published : Oct 26, 2020, 9:38 AM IST

இணையதளங்களில் இஸ்லாமிய வெறுப்புவாத கருத்துகள் தொடர்ந்து பரப்பப்படுவதாகவும் அதை பேஸ்புக் நிறுவனம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து இம்ரான் கான் எழுதியுள்ள கடிதத்தில், "யூதர்களுக்கு எதிராக நாஜி ராணுவம் திட்டமிட்ட நடத்திய ஹோலோகாஸ்ட் குறித்த அனைத்து வகையான கருத்துகளுக்கும் பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.

தற்போதும் சில நாடுகளில், இஸ்லாமியர்களுக்கான குடியுரிமை மறுக்கப்படுகிறது. ஆடை முதல் வழிபாடு வரை அவர்களது அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

எனவே, ஹோலோகாஸ்ட் பற்றிய கருத்துகளுக்கு தடை விதித்ததைப் போல இஸ்லாமிய வெறுப்புவாத கருத்துகளுக்கு எதிராகவும் பேஸ்புக் நிறுவனம் தடை விதிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இதற்கு முன்னரும் பல முறை, இஸ்லாமிய வெறுப்புவாத கருத்துகள் பரப்பப்படுவதையும் ஹோலோகாஸ்ட்டையும் ஒப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இஸ்லாமிய கேலிச்சித்திரங்கள் குறித்து விவாதம், சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர்...

ABOUT THE AUTHOR

...view details