ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும், கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தியும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் அரசை எதிர்த்து நடக்கும் இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர்.
32 கிமீ நீண்ட மனிதச் சங்கிலி போராட்டம்!
ஹாங்காங்கில் பாட்டுப் பாடியும், டார்ச் அடித்தும் 32 கிமீ தூரத்திற்கு மிக நீண்ட மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் 30 வருடத்திற்கு முன்பு நடத்தப்பட்ட பால்டிக் வே போராட்டத்தை நினைவு கூறும் விதத்தில் ஹாங்காங்கில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து பால்டிக் வே போராட்டத்தின் 30ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையிலும், சீனாவுக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை முற்றிலும் கைவிடக் கோரியும் இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஹாங்கான் தீவு, கவுலூன், புதிய யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட வழித்தடங்களில் 32கிமீ தூரத்திற்கு பாட்டுப் பாடியும், டார்ச் அடித்தும் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.