தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தேர்தலை தள்ளிவைப்பதற்கான அவசரச் சட்டம் இயற்றியது ஹாங்காங் அரசு!

கரோனா தாக்கத்தின் காரணமாக தேர்தலை தள்ளிவைக்க, கேரி லாம் தலைமையிலான அரசு அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது.

Hong Kong postpones elections
Hong Kong postpones elections

By

Published : Jul 31, 2020, 7:33 PM IST

ஹாங்காங்: தேர்தலைத் தள்ளிவைக்க நாட்டின் தலைமை நிர்வாகியான கேரி லாம் அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளார்.

7.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் (ஜூலை 31) ஹாங்காங்கில் மூன்று ஆயிரத்து 273 கரோனா தொற்றுடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இது ஜூலை ஒன்றாம் தேதியை ஒப்பிட்டு பார்க்கையில் இரு மடங்கு அதிகமாகும்.

அதிபர் தேர்தல் குறித்து ட்ரம்பின் கருத்தால் பரபரப்பு

முன்னதாக சீனாவின் கட்டளைகளை பின்பற்றுவதாக ஹாங்காங் அரசு செவிசாய்த்திருந்தது. செப்டம்பர் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டால், ஹாங்காங் புதிய பாதுகாப்புச் சட்டம் காரணமாக, அரசாங்க எதிர்பாளர்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைத்திருக்கும்.

ஆனால், தேர்தலைத் தள்ளிவைப்பது அரசு எதிர்பாளர்களுக்கு பேரிடியான செய்தியாக அமைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details