இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து வரிசையாக உள்ள 17 ஆயிரம் தீவுகளில் அமைந்துள்ள மலைதொடர்களில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பொதுவாக இங்கு வசிக்கும் மக்கள், மழைக் காலத்தில் பெரும் போராட்டங்களை சந்திக்கின்றனர். நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்தோனேஷியா நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு - 11 பேர் உயிரிழப்பு! - இந்தோனேஷியா தீவுகளில் விபத்து
ஜகார்த்தா: சுமத்ரா மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தஞ்சுங் லலாங் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தினர். இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த ஒரிரு நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.