தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பானில் இந்திய தொழிலாளர்கள் பணிபுரிய வகை செய்யும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - இந்தியா ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பானில் இந்திய தொழிலாளர்கள் பணிபுரிய வகை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜப்பானில் இந்திய தொழிலாளர்கள்
ஜப்பானில் இந்திய தொழிலாளர்கள்

By

Published : Jan 6, 2021, 7:17 PM IST

டெல்லி:ஜப்பானில் இந்திய தொழிலாளர்கள் பணிபுரிய வழிவகுக்கும் வகையில், இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மத்திய அரசால் நடத்தப்படும் ஜப்பானிய மொழி தேர்வில் தேர்ச்சிப் பெறும் இந்தியர்கள் கட்டுமானம் உள்ளிட்ட 11 துறைகளில் பணிபுரிவதற்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்

ஜப்பான் அரசு வழங்கும் 'சிறப்பு திறன் கொண்ட தொழிலாளர்கள்' என்ற அந்தஸ்தின் கீழ், இந்திய தொழிலாளர்கள் அந்நாட்டில் தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த சிறப்பு திறன் கொண்ட ஊழியர்கள், குறிப்பிட்ட 14 துறைகள், அதாவது, நர்ஸிங், கட்டுமானம், கப்பல் சார்ந்த நிறுவனங்கள் ஆட்டோமொபைல் மற்றும் விமான சேவை, எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், கட்டுமான தூய்மைப் பணி ஆகியவற்றில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டெக்னிக்கல் கல்வியை ஆன்லைனில் கற்றுத் தரும் ஐஐடி

ABOUT THE AUTHOR

...view details