தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகளவில் ஒரே நாளில் 6 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு!

உலகளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 717 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

By

Published : Nov 19, 2020, 2:34 PM IST

or
oe

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் 5 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 339 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 54 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 93 லட்சத்து 52 ஆயிரத்து 858 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 717 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details