உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக இந்தியாவும் அடுத்தப்படியாக பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்து 368 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 32 ஆயிரத்து 287 பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 29 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள அமெரிக்காவில், இதுவரை 85 லட்சத்து 20 ஆயிரத்து 307 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 26 ஆயிரத்து 149 உயிரிழந்தனர். அங்கு, நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர்.