உலக நாடுகளை மிரட்டும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன.
இதுவரை உலக அளவில் 74 லட்சத்து 46 ஆயிரத்து 117 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 137ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 25 ஆயிரத்து 659ஆக உயர்ந்துள்ளது.