தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

லட்சத்தை தாண்டிய கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை! - கரோனா பலி எண்ணிக்கை

உலகளவில் கரோனா வைரஸ் காரணமாக பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது.

ே்
ே்

By

Published : Apr 11, 2020, 10:24 AM IST

உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பல நாடுகளை துவம்சம் செய்துவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு கடந்த ஜனவரி மாதத்தில் பதிவானது. இதைத் தொடர்ந்து, பல நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மிகவும் எளிதாக பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இதுவரை, உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் நெருங்கியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. 3 லட்சத்து 76 ஆயிரம் மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். முதல் உயிரிழப்பு பதிவான மூன்றே மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பலி எண்ணிக்கை


இதையும் படிங்க:
அயோத்தி, பசி மயக்கத்தில் மனிதர்களை கடிக்கும் குரங்குகள்
!

ABOUT THE AUTHOR

...view details