கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை ஒவ்வொன்றாக பதம்பார்த்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பின் மூலம் கோரத் தாண்டவத்தைத் தான் தொடங்கியுள்ளேன் என்பதைக் கோவிட்-19 காட்டிவருகின்றது. இதைக் கட்டுப்படுத்தத் தனிமைப்படுத்தல், கிருமி நாசினி தெளிப்பு, ஊரடங்கு உத்தரவு என, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பஞ்சம் இல்லை.
இருப்பினும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உலகளவில் பல்வேறு நாடுகள் திணறிவருகின்றன. இதுவரை, உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.