தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா வைரசால் 34 லட்சம் பேர் பாதிப்பு! - கரோனா வைரசால் 34 லட்சம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரசால் 34 லட்சத்து 84 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

global-covid-19: 34,84,176 People Affected by Corona Virus
global-covid-19: 34,84,176 People Affected by Corona Virus

By

Published : May 3, 2020, 11:04 AM IST

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 34 லட்சத்து 84 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து 11 லட்சத்து 21 ஆயிரத்து 524 பேர் மீண்டுள்ளனர். அதேபோல் 2 லட்சத்து 44 ஆயிரத்து 778 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பற்றி பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில், '' கரோனா வைரசால் 28 ஆயிரத்து 131 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் உச்சநிலை காலத்தை பிரிட்டன் கடந்துவிட்டது. கரோனா வைரசிலிருந்து நாட்டை மீட்பதற்காக சரியான திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

கரோனா வைரஸ் பற்றி துருக்கி சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில், '' கரோனா வைரசால் நேற்று மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 1,983 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 375 ஆக உள்ளது. மார்ச் 30ஆம் தேதிக்கு பின் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்றார்.

கரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் துருக்கி ஏழாவது இடத்தில் உள்ளது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை இதுவரையில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து 58 ஆயிரத்து 259 பேர் மீண்டுள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

அங்கு, தற்போதுவரை கரோனா வைரசால் 11 லட்சத்து 650 ஆயிரத்து 774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'ஆய்வுக் கூடத்திலிருந்துதான் கரோனா பரவியது' - ட்ரம்ப் திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details