ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாதுகாப்புப்படை வீரர்களை குறிவைத்து சரமாரி தாக்குதலில் தலிபான் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
போர் நிறுத்தத்தை தலிபான் ஒப்புக்கொள்ள வேண்டும் - ஆஃப்கான் அதிபர் வேண்டுகோள்! - ceasefire
காபூல்: புனித ராம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் மேற்கொள்ள தலிபான் ஒப்புக்கொள்ள வேண்டும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் அவ்வப்போது தலிபான் - அமெரிக்க பிரிதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புனித ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்கவுள்ளதால் போர் நிறுத்தம் மேற்கொள்ள தலிபான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு ராம்ஜானை பண்டிகையையொட்டி, தலிபான் அமைப்பு இன்ப அதிர்ச்சியாக மூன்று நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.