கொழும்பு:இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீரிங்கலா நான்கு நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை (அக். 2) இலங்கை சென்றார். இந்நிலையில், அவர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இன்று சந்தித்து பேசினார்.
இதுகுறித்து, இந்திய உயர் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து உரையாடினார்.
இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் இணக்கமான நட்பை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிசெய்துள்ளது. மேலும், இருதரப்பு உறவு குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்"
இலங்கை அதிபர் அமெரிக்காவில் இருந்து நேற்று (அக். 3) திரும்பிய நிலையில், இந்தச் சந்திப்பு இன்று நடைபெற்றது. முன்னதாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, நீயூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை: 8 பேர் உயிரிழப்பும்...தொடரும் அநீதிகளும்