தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 காவலர்கள் பலி - பாகிஸ்தானின்

கராச்சி: பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் உள்ள மசூதி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.

blast

By

Published : May 14, 2019, 8:57 AM IST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகணத்தின் தலைநகரான குவெட்டாவின் மார்க்கெட் பகுதி அருகே உள்ள மசூதியில் நேற்று பொதுமக்கள் தொழுகை நடத்துவதற்காக கூடியுள்ளனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.


இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டபோது அருகில் காவல் துறையினரின் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததால் அதிலிருந்த நான்கு காவலர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 11 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குவாடார் துறைமுக நகர் அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details