இஸ்ரேல் அரசிடமிருந்து இரண்டு மின்தோற்றிகள் (ஜெனரேட்டர்கள்) வாங்கியதில் முறைகேடு செய்ததாக பப்புவா நியூ கினியாவின் முன்னாள் பிரதமர் பீட்டர் ஓ நீல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கட்டிருந்தது.
இந்நிலையில், கோவிட்-19 பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இருந்து பப்புவா நியூ கினியா திரும்பிய அவரை, அத்தீவின் தலைநகர் போர்ட் மோரெஸ்பியில் உள்ள ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட அவருக்கு பிணையில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.