இதுகுறித்து இலங்கையின் அவசரநிலை கணினி ஆயத்தக் குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் டெய்லி மிரர் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கையில், இலங்கையில் செயல்பட்டுவரும் குவைத் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்களின் வலைதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டுத் தூதரக வலைதளங்கள் மீது தாக்குதல் : இலங்கை
கொழும்பு: இலங்கையில் செயல்பட்டுவரும் வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றின் வலைதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக இலங்கையின் அவசரநிலை கணினி ஆயத்தக் குழு தெரிவித்துள்ளது.
sirisena
'.com மற்றும் .Ik 'டொமைன்களில் செயல்படும் வலைதளங்களை ஹாக்கர்கள் குறிவைத்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான வலைதளங்களில் உள்ள தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவதே அவர்களின் திட்டமாகும். இதுகுறித்து நாங்கள் விசாரணை செய்துவருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.