தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு? - தாலிபன் படை

ஆப்கான் நாட்டின் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kabul airport fire
Kabul airport fire

By

Published : Aug 16, 2021, 1:39 PM IST

Updated : Aug 16, 2021, 5:17 PM IST

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆட்சியை பிடித்துவிட்டனர். தற்போது அதிபர் மாளிகை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக, ஆப்கான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்கள் அங்கிருந்து தப்பித்து செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்துவருகின்றனர்.

இதனிடையே, காபூல் விமான நிலையம் முடக்கப்பட்டது. தற்போது விமானநிலையம் ஆப்கானில் மீதமுள்ள அமெரிக்க ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள், விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனால் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான ஓடுதளத்தில் ஓடும் பொதுமக்கள்

மக்கள் விமான ஓடுபாதைகளில் ஓடி விமானங்களில் ஏற முயற்சிக்கும் காணொலிகளும் வெளிவந்துள்ளன. தாலிபன் ஆட்சி அமைக்க உள்ளதால், ஆப்கான் மக்களே நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஆப்கான் ஆட்சி கவிழ்ப்பு: ஜோ பைடன் பதவி விலக வேண்டும்'

Last Updated : Aug 16, 2021, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details