தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிகரிக்கும் மக்கள் போராட்டம் - சீனா எடுத்துள்ள அதிரடி முடிவு! - தைவான்

தைபே: சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளதால், சர்வதேச கவனத்தை சமாளிக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்காக இப்பகுதியை மீண்டும் திறக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

Fearing anti-government protests
Fearing anti-government protests

By

Published : Dec 4, 2020, 3:06 PM IST

கரோனா பரவல் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சீனா மிக விரைவிலேயே கரோனா தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிவிட்டது.

இருப்பினும், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளில் ஒன்றான தைவானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளதாக தைவான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதை சமாளிக்கவே சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு இப்பகுதியை மீண்டும் திறக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 9ஆம் தேதி வரை திபெத் நாட்டிற்கு 18 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தைவானில் சீனா அதிகளவில் முதலீடு செய்துவருகிறது. இதன் காரணமாக சீனாவின் வளர்ச்சியைவிட தைவானின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

கட்டுமானத் துறை, பொது மேலாண்மை மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றில் மிகப் பெரியளவில் சீனா முதலீடு செய்துவருகிறது. தைவான் பகுதியில் மேற்கொள்ளப்படும் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த துறைகளின் பங்கு மட்டும் சுமார் 50 விழுக்காட்டிற்கு மேலாகும்.

இருப்பினும், விவசாயத்தை அடிப்படையாக கொண்டிருந்த தைவான் நாட்டின் பொருளாதாரத்தை சீனா சேவை அடிப்படையிலான பொருளாதாரமாக மாற்றியுள்ளதாக பல வல்லுநர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: 'ஜனநாயகத்திற்குப் பேராபத்து சீனா' - எச்சரிக்கும் அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details