தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவில் போலி கோவிஷீல்டு விற்பனை படுஜோர்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இந்தியா, உகாண்டா நாட்டின் சந்தைகளில் பெருமளவு போலி கோவிஷீல்டு தடுப்பூசிகளின் விற்பனை நடைபெறுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Fake Covishield vaccines found in India Uganda
Fake Covishield vaccines found in India, Uganda

By

Published : Aug 19, 2021, 3:41 PM IST

ஜெனீவா(சுவிட்சர்லாந்து): உலக சுகாதார அமைப்பு போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியாவிலும் உகாண்டாவிலும் மக்களிடம் பெருமளவு விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அரசு அதனை உடனே கண்டறிந்து ஒழிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மருந்தியல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகளின் விநியோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இரண்டு மாதங்களில் சந்தையை ஆக்கிரமிப்பு செய்த போலிகள்

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில், 'போலி தடுப்பூசிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

அதை சுட்டிக்காட்டி, கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனமும், தனது நிறுவனத்தின் பெயரில் சில போலி தடுப்பூசிகள் சந்தையில் விற்பனைக்கு உலவுவதாக வேதனைத் தெரிவித்துள்ளது. இந்தப் போலி தடுப்பூசிகள் உகாண்டாவிலும் இந்தியாவிலும் பெருமளவு விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் இந்தப் போலி தடுப்பூசிகளினால் பொதுமக்கள் பலரின் உடல் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும்' என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை வந்தடைந்த இரண்டரை லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

ABOUT THE AUTHOR

...view details