ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அந்நகரில் இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, சட்டப்பேரவை கண்ணாடித் தடுப்புக்களை உடைத்து போராட்டக்காரர்கள் அவையை முற்றுகையிட்டனர். மேலும், கலகத் தடுப்புக் காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்குப் பிரச்னை முற்றியது.
சர்ச்சைக்குரிய மசோதா பயனற்றதாகிவிட்டது: ஹாங்காங் தலைவர் கேரி லாம் - ஹாங்காங் தலைவர் கேரி லாம்
ஹாங்காங்: ஹாங்காங்கில் வழக்குகளை எதிர்நோக்குவோரை விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்க வகைசெய்யும் மசோதா பயனற்றதாகிவிட்டதாக தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.
பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய அந்தப் போராட்டத்துக்குப் பிறகு, தற்போது மீண்டும் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஹாங்காங் தலைவர் கேரி லாம், ‘மசோதாவில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளன. பிரச்னைக்குத் தீர்வுகாண அரசாங்கத்துக்கும், தனக்கும் சற்று அவகாசம் அளிக்கவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு முன்னர் மசோதாவைத் தற்காலிகமாக ஒத்திவைக்க மட்டுமே, லாம் ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.