ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களால் அங்கு பதற்றமான சூழல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், கந்தகார் மாகாணத்தின் தெற்கு பகுதியிலுள்ள ஸ்பின் போல்டோக் மாவட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல் - ஒருவர் பலி! - civilian
காபூல்: ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டோக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
ஒருவர் பலி
உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியாகினார். இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.