இலங்கையில் ஏப்ரல் 21, 2019 அன்று, நெகம்போ, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலில் அந்தக் குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இந்தத் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிபர் விசாரணை ஆணையம் முன், ஆஜரான இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பான செய்திகளை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்தத் தாக்குதல் தொடர்பான உளவுத் துறை அறிக்கைகள் குறித்து எனக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தால், நான் எனது வெளிநாட்டுப் பயணத்தை நிறுத்திவிட்டு, இத்தகைய கொடூரமான தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பேன்.
உளவுத்துறை அறிக்கைகளைப் பின்தொடர்வதற்கான பொறுப்பை ஒப்படைத்தவர்கள் தங்கள் பணியை விடாமுயற்சியுடன் செய்திருந்தால் இந்தப் பேரழிவைத் தவிர்க்க முடியும்.