நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் மார்ச் 15ஆம் தேதி இரண்டு மசூதிகளில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அல்நூர் மசூதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக காவல் துறை, உளவுத் துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளிடம் விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா,ஆணையம் அமைத்துள்ளார்.
இந்நிலையில், அல்நூர் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தப்பித்த கலித் அல்னோபானி என்பவர் தாக்குதலின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மசூதியின் மற்றொரு கதவை திறக்க 17-க்கும் மேற்பட்டோர் முயற்சித்தனர்.