சுனாமி, நிலநடுக்கம், எரிமலை சீற்றம் உள்ளிட்டவை அவ்வப்போது நிகழ்வது வழக்கம். இதில் ஏற்படும் பாதிப்புகளை அந்நாட்டு மக்கள் தொடர்ந்து சமாளித்து வாழ்ந்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - Philippines
மணிலா: பிலிப்பைன்ஸில் ரிக்டா் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானாவோ எனும் தீவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 6.12 மணிக்கு 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும், இது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.