தமிழ்நாடு

tamil nadu

காலநிலை மாற்றம் விடுக்கும் எச்சரிக்கை மணிகள்!

By

Published : Feb 7, 2020, 9:20 PM IST

காலநிலை மாற்றத்தில் கவனம்செலுத்தவும், சரி செய்யவும் உலகத் தலைவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளபோதும், காலநிலை மாற்றத்தால் நடந்துகொண்டிருக்கும் பேரழிவு சம்பவங்கள் தங்களுக்கான குரலாய் தாங்களே ஒலிக்கின்றன.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு, அமெரிக்காவில் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை, திடீர் வெள்ளம், சூறாவளிகள், பூகம்பங்கள், பஞ்சங்கள் மற்றும் காலம் கடந்த பருவமழையென அனைத்தும் புவி வெப்பமடைதலின் தீவிரத்தையே உணர்த்துகின்றன.

பனிப்பாறைகள் உருகத்தொடங்கி கடல் நீர் மட்டங்கள் அதிகரித்துவருவதையடுத்து கடலோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பெரும் ஆபத்தின் பிடுடில் சிக்கியுள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக, காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் மோசமான பேரழிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆஸ்திரேலியா, அமேசான் மழைக்காடுகள் என உலகம் முழுவதும் காடுகள் தீக்கு இரையாகியுள்ளன.

புவி வெப்பமடைதலின் தற்போதைய போக்கு தொடர்ந்தால் பயிர் விளைச்சலில் கடுமையான சரிவு ஏற்படக்கூடுமென்றும், நிலக்கடலை, வாழைப்பழம், காபி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பல வகையான தாவரங்கள் அழியக்கூடுமென்றும் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகள் இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருக்கும்பட்சத்திலும், சமீபத்திய ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு COP25இல், எந்தவித சாத்தியமான தீர்வும் எட்டப்படவில்லை. இனியும் வளர்ந்த நாடுகள் ஒன்றுகூடி காலநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராட நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மனித நாகரிகத்தின் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கும்.

இதையும் படிங்க: பருநிலை மாற்றம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை - கிரேட்டா காட்டம்

ABOUT THE AUTHOR

...view details