தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு தாய்லாந்து தலைநகர் பங்காக்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் - பாங்காக்
பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் ) உச்சிமாநாட்டில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
asean
இதில் பிராந்திய ராஜாங்க ரீதியான உறவுகளின் மேம்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு வெளியுறவுத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு தாய்லாந்து, நியூசிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் தனித்தனியே இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் இந்த சந்திப்பின் மூலம் இந்திய பசிபிக் பிராந்தியத்தின் உறவானது வலுப்பெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Aug 2, 2019, 7:47 AM IST